என்றென்றும் என் தலைவன் என்னிலே - கவிதா பாரதி
நாங்கள்
முளைக்கும் முன்பே
நீ!
விதைத்திருந்தாய்
வீரத்தை..!
அறியாத வயதில்
உன் வீரமே
ஆளுவதாய்
இருந்ததென்னை..!
கடல் தாண்டும்
வழியறியாமலே
காத்திருந்தேன்..!
வலிகள்
செய்திகளாய்
செவியறைந்து போயின..!
வலிகள் உணரும் பருவம்
நமக்குள்ளே
தடையென்றனர்.
தடை தாண்டா
அடிமைகளாயினும்
கரைக்கப்பால்
நீயிருக்கிறாய் என்பதே
மீளாத் துயரின்
மீப்பெரும்
ஆறுதலளித்தது..!
இன்றும் நிறையும்
விழிகளினூடே
விழித்தேயிருக்கிறேன்
நீ வரும்
நம்பிக்கையில்..!
- கவிதா பாரதி
முளைக்கும் முன்பே
நீ!
விதைத்திருந்தாய்
வீரத்தை..!
அறியாத வயதில்
உன் வீரமே
ஆளுவதாய்
இருந்ததென்னை..!
கடல் தாண்டும்
வழியறியாமலே
காத்திருந்தேன்..!
வலிகள்
செய்திகளாய்
செவியறைந்து போயின..!
வலிகள் உணரும் பருவம்
நமக்குள்ளே
தடையென்றனர்.
தடை தாண்டா
அடிமைகளாயினும்
கரைக்கப்பால்
நீயிருக்கிறாய் என்பதே
மீளாத் துயரின்
மீப்பெரும்
ஆறுதலளித்தது..!
இன்றும் நிறையும்
விழிகளினூடே
விழித்தேயிருக்கிறேன்
நீ வரும்
நம்பிக்கையில்..!
- கவிதா பாரதி