மாவீரன் பிரபாகரன்
பிரபாகரன்!
உச்சரிக்கும்போதே
உத்வேகம்
இதை மறுப்பதிற்கில்லை
ஒருபோதும்!
விடுதலையை நெஞ்சில்
சுமந்தவன் - பகைவர்
தலையெடுத்தலை தணியாமல்
செய்தவன்!
புறநானூற்றை இருபதாம்
நூற்றாண்டில் படைநடத்தி
காட்டியவன்
எங்கள் தலைவன்
பிரபாகரன்!
எதிரியின் கொலைவாள்
நடுங்கியது
இவன் தோட்டாக்களின்
சீற்றத்தில்!
நீர்
நிலம்
காற்று
எங்கெங்கும் ஒலித்தது
புலிகளின் வீரம்
அதன் தாயுமானவன்
உன் புகழ்
எட்டு திக்கெங்கும்
கூறும்!
புலியடித்து செத்தவனைவிட
கிலியடித்து செத்தவனே அதிகம்
வரலாறு இப்படித்தான்
சொல்கிறது
வன்னிக்காட்டு சரித்திரத்தில்!
வேட்டைநாய்கள் சூழ்ந்து
என்ன செய்யும்
விடுதலை வேகம்கொண்ட
புலியிடம்!
விடுதலை
வீரம்
இலட்சியம்
தியாகம்
அர்ப்பணிப்பு
இதோ அனைத்திற்கும்
இந்த ஒற்றைச்சொல்
மாவீரன்"பிரபாகரன் "
-காமராசன் மண்டகொளத்தூர்
கருத்துகள் இல்லை