பிரபாகரனியம் (பகுதி 01)

பிரபாகரனியம் என்பது தனிமனித வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் குறியீடு. ஈழ இனத்தின் தனிக்குறியீடு….

(பகுதி பகுதியாக எழுதப்படும்)

இலங்கை வடக்கே பருத்திருத்துறைக்கு அருகில் உள்ளது வல்வெட்டித்துறை. அழகான கடல் சார்ந்த பூமி.. திருமேனியர் குடும்பம் என்றால் அங்கு தெரியாதவர்கள் எவருமே இல்லை.. திருமேனியர் என்பது பிரபாகரனின் பாட்டன்களில் ஒருவர். அவரின் வழிவந்தவர்தான் திருவேங்கடம் வேலுப்பிள்ளை. திருவேங்கடம் வேலுப்பிள்லையின் குடும்பம் மிகுந்த கடவுள் பக்தி கொண்ட குடும்பம். வல்வெட்டித்துறை வைதீஸ்வரன் கோவில் வேலுப்பிள்ளையின் பாட்டனான திருமேனியரால் கட்டப்பட்டதுதான்.. பல தசாப்தங்களாக வேலுப்பிள்ளையின் குடும்பம்தான் அந்த கோவில்களில் தர்மகர்த்தா. அத்துடன் வல்வை முத்துமாரி அம்மன் ஆலயம் நெடியக்காடு பிள்ளையார் கோவில் கட்டுமானத்துக்கு திருமேனியர்தான் நிதி வழங்கினார்.

பிரபாகரனின் தந்தைதான் ஆன்மீக வழிவந்தவர் என்றால் தாய் பார்வதியும் சளைத்தவர் அல்ல. வல்வெட்டித்துறைக்கு அருகில் உள்ள பருத்தித்துறையில் பிரபலமான மெத்தை வீட்டு நாகலிங்கத்தின் மகள்தான் அம்மா பார்வதி… பருத்தித்துறையில் பலகோவில்கள் பார்வதி அம்மாவின் தந்தையால் கட்டப்பட்டவைகள்தான்..

திருவேங்ககடத்தின் மகன் வேலுப்பிள்ளைக்கும் நாகலிங்கத்தின் மகள் பார்வதிக்கும் இடையே திருமணம் நடந்து 1954 ஆம் ஆண்டு கார்த்திகை 26 ஆம் நாள் பிரபாகரன் பிறக்கிறார்.

பிரபாகரனுக்கு ஜெகதீஸ்வரி,,வினோதினி,மனோகரன் , என்று மூன்று மூத்த சகோதர சகோதரிகள்…

பிரபாகரன் தான் கடைக்குட்டி. வழமை போலவே கடைக்குட்டியான பிரபாகரன் சுட்டித்தனமான கூர்மையான அறிவு கொண்ட குழந்தை. அப்பாவின் செல்லப்பிள்ளையும் கூட. எல்லோருக்கும் செல்லப்பிள்ளை என்பதால் துரை/துரைக்குட்டி என அழைக்கப்படுவார்

பிரபாகரன். வேலுப்பிள்ளை குடும்பத்தில் கோவில் திருவிழா என்பது முக்கியமான நிகழ்வு. மிகவும் பக்தி வழிவந்த குடும்பம் ஆகையால் திருவிழாவிற்கு தமிழ் நாட்டில் இருந்து நாதஸ்வர்ம மற்றும் பரதநாட்டியக்கலைஞர்கள் வரழைக்கப்படுவார்கள். அந்த திருவிழா நாட்களில் அரை காற்சட்டையுன் பிரபாகரன் சுறு சுறுப்பாக ஓடித்திரிவார்.

இவரின் சுறுசிறுப்பு அப்போதைய சொற்பொழிவாளரான கிருபானந்தவாரியாருக்கு மிகவும் பிடிக்கும்… தலைவரை மடியில் வைத்து விளையாடுவாராம் ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்தவாரியார்… ஒரு முறை பிரபாகரன் அறிவுக்கூர்மையாக கேள்வி கேட்க இவன் வருங்காலத்தில் ஆன்மீகப்புரட்சி செய்வான் என்று பார்வதியம்மாவிடம் சொல்லிச்சிரித்தாராம் கிருபானந்தவாரியார்.

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை ஆன்மீகத்தை போலவே காந்தியத்திலும் அதிக நாட்டம் உடையவர். அன்பாலும் அஹிம்சையாலும் அனைத்தையும் சாதிக்க முடியும் ஆயுதம் ஒரு போதும் பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது அவர் கொள்கை.ஆனால் பிரபாகரனின் வழி வேறு.

அந்த நேரங்களில் பிரபாகரனின் தந்தையும் அவர் நண்பர்களும் திண்னையில் இருந்து இலங்கை அரசியலும் சிங்களவனின் கொடுமைகளையும் பற்றி பேசிக்கொண்டு இருப்பார்களாம். பிரபாகரன் அதை மிக உன்னிப்பாக கவனித்து சில கேல்விகளையும் கேட்பாராம். . அதுதான் தேசியத்தலைவரின் மனதில் சிங்களவன் மீது அதிக வெறுப்பு வர முக்கிய காரணம்… ஏன் தமிழன் அடங்கி போக வேண்டும் திருப்பி அடிக்க முடியாதா என அப்பாவியாக கேட்பாராம் அடிக்கடி,….

அப்போதுதான் அந்தச்சம்பவம் நடந்தது.. “பாணந்துரை ” என்னும் ஒரு சிங்களக் கிராமத்தில் இருந்த கோவில் பிராமணன் ஒருவர் அடித்து காயப்படுத்தப்பட்டு உயிருடன் மகள்கள் முன்னே எரிக்கப்பட்டார்,. அந்த சம்பவம் தந்தையின் நண்பர்கள் மூலம் பிரபாகரனுக்கு தெரியவருகிறது. மிகவும் விரக்தி அடைந்தவராய் ஏன் அவர் திருப்பித்தாக்கவில்லை?. அவர் என்ன தப்பு செய்தார்?. அவர் எப்படி எரிக்கும் வரை அமைதியாய் இருந்தார் என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கிறார். சிறு பிள்ளை வெறும் 4 வயதுதான். தந்தை செல்லமாக கண்டித்து விடுகிறார். ஆனாலும் பிரபாகரன் மனம் அடங்கவில்லை.

ஆனால் விதி விட்டு வைக்கவில்லை. 1958 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள கலவரத்தில் கொழும்பிலிருந்த அவரின் சொந்த அத்தையின் வீட்டுக்குள் சிங்களக்காடையன் புகுந்தான். குளியறையில் பதுங்கியிருந்த அத்தையையும் கணவனையும் அடித்து சித்திரவதைப்படுத்தி கணவனை எரித்தே கொல்கிறார்கள். எரிகாயங்களுடனும் வெட்டுக்காயங்களுடனும் பிரபாகரனின் அத்தை தப்பித்து சில நல்ல உள்ளங்களால் மருத்துவமனையின் சிகிச்சை பெறுகிறார். சுமார் ஒரு வருடத்தின் பின்பு பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டிற்கு வருகிறார் அத்தை.. வீடு முழுவதுன் அத்தையின் அழுகுரல். அத்தை நடந்ததை சொல்லி முடிக்க பிரபாகரனின் சகோதரிகள் இருவரும் காதைப்பொத்திக்கொள்கிறார்கள். பிரபாகரனின் கண்ணில் கண்ணீர். வெறும் 5 வயதுதான்…. என்ன செய்வது என்று புரியாமல் அழுகிறார். அந்தச்சம்பவம் அவரின் மனதில் ஆழமாக பதிகிறது.

காலங்கள் ஓடுகிறது. இலங்கையில் நடந்த சில அரசியல் குளறுபடிக்கு பின்னர் 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக சிறீமாவோ இலங்கைக்கு பதவியேற்கிறார். அந்தோ முடிந்தது தமிழன் கதை. தமிழனுக்கு எதிரான அடக்குமுறைகள் உக்கிரம் அடைகிறது..

1961 ஜனவரி 1ம் திகதி முதல் இலங்கை முழுவதும் சிங்களம் ஆட்சி மொழியாகவும் அலுவலக மொழியாகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறக்கிறது. நீதிமன்றங்கள் யாவும் சிங்களம் திணிக்கப்படுகிறது. தமிழரால் ஒரு நீதியையும் பெற முடியவில்லை… சரி போகட்டும்… தமிழ் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் காவல் நிலையங்களும் நீதிமன்றங்கள் சரி தமிழ் மொழியில் நடக்கட்டும் என கோரிக்கையை முன்வைக்கிறது தமிழரசுக்கட்சி. ஆனால் பெரும்பான்மை சிங்கள கட்சிகளால பாராளுமன்றத்தில் அந்த கோரிக்கை தோற்கடிக்கப்படுகிறது. தமிழர்கள் கொதித்தெழுந்தார்கள்…. 1961 பெப்ரவரி 20ம் திகதி யாழ்ப்பாணம் அமைச்சு செயலகத்தின் முன்பு காந்திய வழியில் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பிக்கிறது தமிழரசுக்கட்சியும் தலைவர் செல்வநாயகமும். அஹிம்சைப்போராட்டம் இலங்கை முழுவதும் பரவுகிறது.

அரசியல் தந்தை செல்வநாயகம்

1. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் அலுவலக மொழியாக்கப்பட வேண்டும்

2. தமிழர் பகுதி நீதி மன்றங்கள் தமிழில் இயங்க வேண்டும்

என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டம் நடாத்துகிறார்..

ஆனால் அஹிம்சையை இலங்கை சிங்கள அரசு மதிக்கவில்லை. 1961 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த அஹிம்சாபோராட்டத்தை அடக்க சிங்கள காடையர் போலீஸ் குழு களம் இறக்கப்படுகிறது. தமிழ் அஹிம்சைப்போராட்டம் தடிகள் மூலம் அடக்கப்படுகிறது.. அந்த தடியடியில் தமிழரசுக்கட்சியின் தலைவரில் ஒருவரான “ஏகாம்பரம் கொல்லப்படுகிறார்”. தமிழர்கள் திகைத்துப்போனார். மேலும் வன்முறைகள் கட்டவிழுத்துவிட்டு சகல தமிழ்த்தலைவர்களையும் கைது செய்து பலரை சிறையில் அடைத்தும் கொலையும் செய்கிறது சிங்கள அரசு…. தமிழர்களின் எதிர்காலம் இருட்டாக மாறுகிறது…

அடுத்த் பகுதியில் ஈழப்போராட்டம் பற்றி தொடரும்

தொடரும்

கருத்துகள் இல்லை

தீம் படங்களை வழங்கியவர்: follow777. Blogger இயக்குவது.